உருளைக்கிழங்கு முறுக்கு......... நல்லா கடிச்சு நொறுக்கு.........


உருளைக்கிழங்கு - 2 

அரிசி மாவு  - இரண்டு கப் 

கடலை மாவு - ஒரு கப் 

மஞ்சத்தூள் - 1/4 டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - சிறிதளவு

 வெண்ணெய் - ரெண்டு ஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு


உருளைக்கிழங்கை வேகவைத்து தாேளை உரித்து அதனாேடு 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் .

 பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஜீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .

 அந்த கலவையில் வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும் .

 இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசையவும் .

 இந்த மாவை சூடான எண்ணெயில் முறுக்கு வடிவில் பிழிந்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

தயார்  உருளைக்கிழங்கு முறுக்கு......

நல்லா கடிச்சு நொறுக்கு .........

1 கருத்துகள்

புதியது பழையவை