வீடுகளை புதுமையாக்கு ....... மனதை இனிமையாக்கு ........


வீடுகளில் பராமரிப்பு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் பங்கெடுக்கும் பணியாகும் .

ஹால் பகுதியில் உள்ள திரைகள் ,டிவி, சோபா செட் ,தரை விரிப்புகள், ஆகியவற்றை தகுந்த முறையில் சுத்தம் செய்து அவற்றின் மேலுறைகளை வேறு நிறங்கள் கொண்டதாக மாற்றி அமைக்கலாம் .

படுக்கையறையில் உள்ள விரிப்புகள், பாய், தலையணை உறை, மின் விளக்குகள், உள் அலங்காரம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யலாம்
 அல்லது கையடக்க பட்ஜெட்டில் அவற்றை வேறு நிறங்களில் அல்லது இதர கூடுதல் பொருள்களுடன் மாற்றி அமைக்கலாம் .

வீட்டு வாசல், வெளிப்புற வாசலின் மையப்பகுதி அல்லது வீட்டின் ஹால் ஆகியவற்றின் மத்திய பகுதியில் அழகான ரங்கோலி கோலம் வரைந்து அதன் நடுவில் கண்கவரும் வகையில் சிறிய பாத்திரத்தில் நீரூற்றி அதில் பூக்களை போட்டு வைக்கலாம்
 ரெடிமேடாக கிடைக்கும் தோரண வகைகளை வீட்டின் முன்பக்கம், தலைவாசல் உள்ளிட்ட மற்ற வாசல் பகுதிகளில் கட்டி அழகாக மாற்றலாம்.

 விதவிதமான டிசைன்களில் விற்கப்படும் வண்ண காகிதங்களை வாங்கி வந்தும் தோரணமாக கட்டி வைத்து வீட்டை அழகு படுத்தலாம்.

 வீடுகளுக்குள் சத்தம் ஏற்பட விண்ட் சைன் என்று சொல்லப்படும் இனிமையான ஒலியெழுப்பும் சிறு குழல் தொகுப்பை வாங்கி ஹால் பகுதி மற்றும் வரவேற்புறை ஆகியவற்றின் மேற்கூரைகளில் பொருத்தலாம்

 வீடுகளில் உபயோகமும் இல்லாத பொருட்கள் அல்லது கடந்த ஒரு ஆண்டாக பயன்பாட்டில் இல்லாத பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக அளித்து விடலாம் .

அதன் மூலம் வீடு புதிய மாற்றத்துடன் இருப்பதை உணர முடியும்.

1 கருத்துகள்

புதியது பழையவை