அதில் வீகன் உணவு முறையும் ஒன்று.
அசைவ உணவுகளை தவிர்த்து, தாவர உணவுகளை சாப்பிடுவதாகும்.
வீகன் உணவு முறையில் காய்கறிகள் பழங்கள் தானியங்கள் போன்ற தாவர உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
இந்த உணவு முறையினை பின்பற்றுபவர்கள் விலங்குகளின் தோலில் இருந்து தயாரிக்கும் பொருட்களை கூட தவிர்த்து விடுவார்கள் .
பால் ,நெய், மாமிச உணவுகள் ,முட்டை, தேன் ஆகியவற்றை தவிப்பார்கள் .
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் வயதுக்கு ஏற்ப எவ்வளவு எடையை குறைக்க வேண்டும் .
என்ன காரணத்தினால் எடை அதிகமாகிறது ,ஏதேனும் உடல்நல குறைபாடு இருக்கிறதா ? போன்ற அனைத்து விஷயங்களையும் பரிசோதித்த பின்னர், மருத்துவரின் ஆலோசனையோடு வீகன் உணவு முறையை பின்பற்றலாம்.
ஒரு நாளில் இரண்டு முறை தானியங்கள் ,மூன்று முறை காய்கறிகள் ,பழங்கள், மற்றும் பால் அல்லது பாலுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிட வேண்டும்.
தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் .
உடல் எடையை குறைக்க முயற்சியில் இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது முக்கியமானது .
ஒரு நாளுக்கு தேவையான கார்போஹைட்ரேட் ,கொழுப்பு ,புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும்.
உடல் வீகன் உணவு முறையுடன் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி, சீரான தூக்கம் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையை பின்பற்றுவது அவசியம் .
அப்பாேதுதான் எடை எளிதாக குறையும்.
அதிக இனிப்புகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ,சோடா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி தம்பி!!🙏🙏
பதிலளிநீக்கு