அன்பே உன்னிடம் இதயத்தை தொலைத்துவிட்டேன்
அதை தேடிச் சென்று பார்த்தேன்
நானும் எடுத்து ஓடி வந்தேன்
அழகே உனது இதயத்தை எடுத்தே!
நீயோ தேடி அலைய வேண்டாம்
பத்திரமாய் நான் வைத்து காப்பேன்
காதலின் இன்பத்தில் மூழ்கிட வைப்பேன்
என்னிடமே இருந்திடும் அளவு
காதல் செய்து மகிழ்வேன்
அடியே உந்தன் இதயமே இடமாறிவிட்டது
நீயோ எப்பொழுது இங்கே
வந்திடப்போகிறாயோ?
Super brother 👌🏼👌🏼
பதிலளிநீக்குநன்றி சகோதரியே
நீக்கு