ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி
மறைந்திருக்கும் ரகசிய கேமராக்களால் நமது அந்தரங்கம் அம்பலமாக அபாயம் தற்போது இருக்கிறது.
ஹோட்டல், ஜவுளிக்கடையில் உடை அணிந்து பார்க்கும் அறை, பொதுவான இடங்களில் உள்ள கழிப்பிடம் போன்றவற்றில் ரகசிய கேமராக்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கலாம்.
இந்நிலையில் ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி?
ஹோட்டல் அறைக்குள் சென்றதும் முதலில் சீலிங் பேனை கூர்ந்து பார்க்கவும் .
விளக்கை அணைத்து தொலைபேசியின் கேமராவை இயக்குங்கள் .
அந்த வெளிச்சத்தில் மின்விசிறியை பார்த்து விளக்குகள் ஒளிர்கின்றதா? என்று பார்க்கவும்.
ஒளிரும் சிவப்பு விளக்கை கண்டால் கவனமாக இருக்கவும் .
அறையில் தேவையற்ற பொருட்களைக் கண்டால் உடனடியாக அவற்றை அகற்றச் சொல்லுங்கள்.
அகற்ற முடியாத பொருள் என்றால் அது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
அலங்கார பொருட்கள் கூட ரகசிய கேமராவை கொண்டு இருக்கலாம்.
கேமராக்கள் பெரும்பாலும் மின்னணு சாதனங்களில் மறைக்கப்படுகின்றன.
எனவே தங்கும் அறையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மீது கவனம் செலுத்துங்கள் .
ஸ்பீக்கர்கள் அல்லது கேட்கும் சாதனங்களை நன்றாக பாருங்கள்.
இதன் மூலம் கேமராவை எளிதில் மறைக்க முடியும்.எனவே இது சரியாக கவனிக்கவும்.
குளியல் அறை கொக்கிகள் அல்லது துணி தொங்கும் கம்பிகளை சரிபார்க்கவும்.
கேமராக்களை ஹேங்கரிலும் மறைத்து வைக்கலாம் .
அறையில் உள்ள திரைச்சீலைகளையும் நன்றாக பாருங்கள்.