வெறும் வயிற்றில் சாப்பிட கூடியவையும் , தவிர்க்க வேண்டியதும்

வெறும் வயிற்றில் சாப்பிட கூடியவையும் , தவிர்க்க வேண்டியதும்
 தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

 காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும்.

 கழிவுகள் வெளியேறும்.

 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 சருமம் இளமையாகும் .

புத்துணர்வு கிடைக்கும்.

 செரிமானம் சீராகும் .

மலச்சிக்கலை சரி செய்யும்.

 இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால் உடலுக்கு பலம் தரும்.

 சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து.

 குரலை மென்மையாக்கும்.

 ரத்தத்தை சுத்தம் செய்யும் .

உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

 வயிற்று எரிச்சலை குறைக்கும்.

 செரிமானத்துக்கு உதவும்.

 மலச்சிக்கலை சரி செய்யும்.

 தூக்கமின்மையை போக்கும்.

 உடல் எடையை குறைக்கும்.

 வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.

 வெந்தய நீர் குளிர்ச்சியை தந்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் .

சீரகத் தண்ணீர் செரிமானம் இன்மை கோளாறுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

 முளைகட்டிய பயிரில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் ,புரோட்டின், எண் சயின்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன .

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.

 இதய நோயிலிருந்து நம்மை காக்கும்.

 உடல் எடையை கட்டுப்படுத்தும் .

வாயு தொல்லை உடையவர்கள் ஒவ்வாமை ஏற்படுகிறவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.

 கேரட், முள்ளங்கி ,வெள்ளரி போன்றவற்றை பச்சையாகவே சாப்பிடலாம்.

 காய்கறிகளின் சாறு உடலை சுத்தப்படுத்தும்.

 ரத்தத்தை விருத்தி ஆகும்.

 வயிற்றில் பழங்களாகவும் சாராகவும் சாப்பிடலாம் .

உடல் ஆரோக்கியம் பெறும் உடலின் சக்தி அதிகரிக்கும்.

 சருமம் பொலிவு பெறும் .

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி ,ஆப்பிள், ஆரஞ்சு, தர்ப்பூசணி, ஸ்ட்ராபெரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.
 வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

கருத்துரையிடுக

புதியது பழையவை