உடல் பருமன் குறைய
அரை கீரையை சூப் செய்து வாரம் மூன்று முறை அருந்த உடல் பருமன் குறையும்.
கருவேப்பிலையை துவையல் செய்து சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
கொத்தமல்லி இலையில் சூப் செய்து அருந்தினால் உடல் மெலியும்.
தினமும் காலை, மாலை அருகம்புல் சார் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.
தினமும் அரை டம்ளர் இஞ்சி சாறு சாப்பிட்டு வர தொப்பை குறையும்.
கற்றாழை சாறுடன் கடுக்காய் பாெடியையும் கலந்து சாப்பிட்டால் உடல் குறையும் .
சுண்டைக்காயை கூட்டு, குழம்பு செய்து சாப்பிட உடல் எடை குறையும்.
கொள் ரசம் செய்து சாப்பிட்டு வர ஊளைச்சதை குறையும்.