நெல்லி காய்

நெல்லி காய்
நெல்லிக்காயில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்வதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இத்தகைய அற்புதம் கொண்ட நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிடும் போது சளித்தொல்லை, தொண்டை புண் போன்றவை குணமாகும்.

மேலும் தொடர்ந்து சாப்பிட தேன் நெல்லிக்காயை தினமும் ஒன்று என சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதோடு இரத்த அணுக்களின் அளவும் அதிகரித்து இரத்த சோகை நீங்கிவிடும்

நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதன் மூலம் இதய தசைகள் வலிமை அடைந்து இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

கண் பிரச்சனை உள்ளவர்கள், தொடர்ந்து தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் நீர் வரதல், கண் சிகப்பு போன்றவை விரைவில் குணமாகும்

சில பெண்களுக்கு வெள்ளைப்படுதல் அதிகம் இருக்கும். அத்தகைய பெண்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வருவதன் மூலம் வெள்ளைப்படுதலை தடுக்கலாம். மேலும் கர்ப்பப்பை பாதிப்புகளும் நீங்கி சீரான மாதவிலக்கு உண்டாகும்.

சிறுநீர் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தேன் நெல்லிக்காய் சிறந்த மருந்து. சிறுநீரக நோயாளிகள் தேன் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் குணமாகிவிடும்

தினமும் நெல்லிக்காய் ஜீஸ் சாப்பிட்டால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாககும். ஆரோக்கியமாகவும் காணப்படும்
முடி உதிரும் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர முடி கொட்டுவது குறைந்து முடி வளருவது அதிகரிக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை