சண்டையோடு சிரிப்பு

சண்டையோடு சிரிப்பு

01. அக்கடான்னு சோபாவிலே டிவி முன்னாலே உட்கார்ந்துகிட்டு இருந்தேன். பொஞ்சாதி வந்து பக்கத்துல உக்காந்தா; 
டிவி ல என்ன இருக்கு? ன்னு கேட்டா 

ஒரே தூசியா இருக்குன்னு சொன்னேன்....
 
சண்டை வந்திடுச்சு. 

02. நேத்து ராத்திரி எதாவது விலை அதிகம் உள்ள இடத்துக்கு கூட்டிகிட்டுபோங்கன்னு பொஞ்சாதி கேட்டா ?

நான் உடனே அடுத்த ரோட்டிலே இருக்கிற பெட்ரோல் பங்குக்கு கூட்டிகிட்டு போனேன்....

சண்டை வந்திடுச்சு. 

03. நம்ம ஆன்வெர்சரிக்கு எங்க போகலாம்னு பொஞ்சாதிகிட்டே கேட்டேன். 

ரொம்ப நாளா நாம போகாத இடத்துக்கு போவோம்னு சொன்னா ?

நான் உடனே எங்கம்மா ஊட்டுக்கு கூட்டிகிட்டு போனேன் ....

சண்டை வந்திடுச்சு 

04. இந்த வருட ஆன்வர்சரிக்கு உனக்கு ஒரு பரிசு தரப்போறேன். என்ன வேணும்னு சொல்லுன்னு கேட்டேன். 

மூணு செகண்ட்ல 0லிருந்து 100 வரைக்கு வர மாதிரி வித்தியாசாமான பொருளாக கொடுங்கன்னு சொன்னா

நான் ஒரு வெயிட் பார்க்கிற மெஷின் வாங்கிக்கொடுத்தேன்...
 
சண்டை வந்திடுச்சு 

05. இன்னைக்கி காலைலே கண்ணாடி முன்னாலே நின்னுகிட்டு இருந்தவ - 'எனக்கே என்னை பார்த்தா பிடிக்கல. வயசானவ மாதிரி தெரியுது; குண்டான மாதிரியும் தெரியுது; முகம் வீங்கிப்போன மாதிரி தெரியுது" அப்படின்னு புலம்பிகிட்டு, "உங்களுக்கு எப்படி தெரியுது?ன்னு என்கிட்டே கேட்டா. 

"உனக்கு கண் எந்த பிரச்சினையும் இல்லாம தெளிவா தெரியுது'ன்னு சொன்னேன்....

சண்டை வந்திடுச்சு 

06. இத அப்படியே வாட்சப்பில எழுதி என் பிரண்டுக்கு அனுப்பி வைச்சேன். அவன் அப்படியே அவன் பொஞ்சாதிக்கு forward பண்ண இப்ப அங்க..
சண்டை வந்திடுச்சு....

கருத்துரையிடுக

புதியது பழையவை