பாத வெடிப்புக்கு 6 தீர்வுகள்
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் வைட்டமின் A சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சருமத்தில் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது.
வாழைப் பழத்தை நன்கு மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் வரை உலர விட்டு பின்பு கழுவி வர பாத வெடிப்பு சரியாகும்.
தேன்
பாத வெடிப்பை சரி செய்ய தேன் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
பாதங்கள் மூழ்கும் அளவு வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் தேன் கலந்து அதில் பாதங்களை 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு காலை அலம்பி விடவும்.
வாரத்தில் ஒரு நாள் இப்படி செய்து வரலாம்
கற்றாழை
கற்றாழை சாற்றை இரவில் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும்.
காலை எழுந்து பாதங்களை கழுவி விடவும்.
வாரத்தில் 2 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
சமையல் சோடா
சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊற விடவும்.
பிறகு, ப்யூமிஸ் கல் கொண்டு பாதங்களை தேய்த்து பின் சுத்தமான நீரில் கழுவினால் பாத வெடிப்பு சரியாகும்.
எலுமிச்சை
புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும்.
இரவில் எலுமிச்சை சாறை பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும்.
காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
இப்படி செய்வதாலும் பாதங்களில் வெடிப்பு சரியாகும்.
மவுத்வாஷ்
வாய்க் கொப்பளிக்க பயன்படுத்தப்படும் மவுத்வாஷில் ஆல்கஹால் இருப்பதால் கால் நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும்.
எனவே, வெதுவெதுப்பான நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 20 நிமிடங்கள் வரை பாதங்களை வைத்திருந்து பிறகு ப்யூமிஸ் கல் கொண்டு தேய்த்து வந்தால் பாத வெடிப்பு சரியாகும்.
இதனை வாரம் ஒரு முறை செய்து வருவது மிகவும் நல்லது.