நம் ஆரோக்கியம் நம் கையில்
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
உதாரணமாக நாம் நன்றாகத்தான் இருப்போம்.
திடீரென்று நமக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுவிடும்.
உடலை பேணி காப்பது நமது கடமையாகும் என்பதை பற்றிய பழமொழிகள்
" நல்ல காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்கு சமம் "
"குளிர்ச்சியான தலையும் சூடான பாதங்களும் நீண்ட வாழ்வுக்கு உகந்தவை"
" ஆரோக்கியம் உள்ளவனுக்கு தினசரி திருமணம் தான்"
" முகம் மலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, அமைதி இவை உள்ள இடத்தில் மருத்துவருக்கு வேலையில்லை"
"மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மருத்துவர்களுக்கு நோய் வரும் "
" முன்னிரவில் தூங்கி அதிகாலையில் எழுந்திருப்பவனுக்கு உடல் நலமும், செல்வமும் ,அறிவும் பெருகும்"
"சூரியன் போகாத இடத்திற்கு மருத்துவர் போகிறார்"
" செல்வம் இல்லாமல் ஆரோக்கியம் மட்டும் இருந்தால் அதுவே பாதி நோயாகும்"
" உடல்நலம் உள்ளவனுக்கு ஒவ்வொரு நாளும் விருந்துதான்"
" இரவு சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் சிறிது உலாவுதல் நலம்"
" நன்றாக இருக்கும் உடலில், நல்ல மனம் தங்கி இருக்கும்"
" ஒருவேளை உணவை இழந்தால் நூறு மருத்துவர் களைப்பதை விட மேலானது"
" உணவு, அமைதி, முகம் மலர்ச்சி ஆகிய மூவருமே உலகில் தலை சிறந்த மருத்துவர்கள்"
" தாகத்தோடு படுக்கச் செல்பவன் உடல் நலத்தோடு விழித்து எழுவான் "
"நல்ல மனைவியும், உடல் நலமும் மனிதனின் சிறந்த செல்வம்"
" மருத்துவர்களை விட உணவு முறை அதிகம் குணமுடையதாகும்"
" மதிய உணவுக்குப் பின் சிறிது நேரம் அமர்ந்திருந்து, இரவு உணவுக்குப் பின் சில மையில் நடக்க வேண்டும்"
" ஒருவனுக்கு உடல் நலம் குறைவு என்றால் எல்லாமும் குறைவு என்று பொருள்"