அம்சமான அமேசான்

அம்சமான அமேசான் 
ஆண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காடுகள் ஆகும். இது உலகில் வெளியிடப்படும் கார்பன்-டை-ஆக்சைடை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது.

இந்த காடுகள் ஆபத்தானவை. இதற்கு காரணம், அங்கு வாழும் விலங்குகளும், இயற்கை அமைப்புகளும், தண்ணீரின் ஓட்டமும், இருட்டான சூழ்நிலையும் தான்.

அமேசான் காடுகளை உருவாக்கிய பெருமை அமேசன் நதிக்கே போய்ச் சேரும். அமேசான் நதி உலகின் மிகப்பெரிய நதியாகும்.

உலகின் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் இக்காடுகளில் தான் வசிக்கின்றன. எண்ணற்ற செடி கொடிகளையும், மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இன்றும், அமேசான் காடுகளிலும் நதிகளிலும் மனிதர்களால் கண்டுபிடிக்கப்படாத மர்மங்கள் நிறைய உள்ளன.

அமேசான் நதி மேற்கில் இருந்து கிழக்கு திசையில் பாயும் ஆறாகும். இதற்கு 17 பெரிய ஆறுகளும், ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறிய கிளை ஆறுகளும் உள்ளன. எனவே, அமேசான் ஆறானது, “மிகப்பெரிய வல்லரசு ஆறு” என்று கூறப்படும்.

வரலாற்று படி, அமேசான் காடு, மில்லியன் ஆண்டுகளுக்கு முதல் உருவானது.அமேசான் மழைக்காடு, மீன்,பறவைகள், ஊர்வன மற்றும் நிலநீர் வாழும் உயிரினங்களின் உள்ளடக்கிய ஒரு பெரிய பல்வேறு மர்மமான மற்றும் சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகிறது.

பலவகையான மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்கள் இங்கு வளர்வதால் இங்கு பற்பல மருத்துவ ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .

இந்த காடுகளில் 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும், ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன.

அமேசான் மழைக்காடுகள், உலகின் மிகப்பெரிய உயிரியல்ஆய்வு பிரதேசமாகவும் விளங்குகிறது.

அமேசான் ஆற்று தண்ணீர், கடலுக்குள் 100 க்கும் மேற்பட்ட மைல் வரைக்கும் கலந்து, கடலின் உப்புத்தன்மை செறிவை குறைக்கின்றது.

15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அமேசான் நதி பசிபிக் பெருங்கடலில் மேற்கு நோக்கி பாய்ந்துள்ளது. தென் அமெரிக்க தகடு ( south American plate) மற்றொரு டெக்டானிக் தட்டின் (tectonic plate) மீது நகர்த்தப்பட்ட இயற்கை மாற்றத்தால், ஆண்டெஸ் மலைகள் மெதுவாக உயர்ந்தன. அமேசான் சூழல் கடுமையாக மாற்றப்பட்டது. பிறகு, அமேசான் நதிக்கு, அட்லாண்டிக் நோக்கி கிழக்கு வழி திறக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆண்டெஸ் மலையின் எழுச்சியும் உலகில் நிகழ்ந்த நிலவியல் மாற்றங்களும் அமேசான் ஆற்றையும் போக்கையும் மாற்றின. அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளம் கொண்டன. மலை உயர்ந்ததால் பிரேசில் கயானாவில் இருந்த பாறை திட்டுகள் அமேசானின் ஓட்டத்தை தடுத்தன. இதே காலகட்டத்தில்தான் அமேசான் ஆற்றின் கரையின் இருபுறமும் நீரோட்டம் அதிகரித்து, அமேசான் மழைக்காடுகள் உருவாகின.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய அமேசான் இன்றும் தனி சிறப்புடன் தனது ஓட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை