தினம் ஒரு பேரிச்சை

தினம் ஒரு பேரிச்சை 

பேரீச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்டோக் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.

 பேரிச்சம்பழத்தில் விட்டமின் பி6, பி12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

 இதில் இருக்கும் வைட்டமின் பி6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது.

 தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றங்களை நாம் உணரலாம்.

 தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் குடலிறக்கத்தை சீராக்கி செரிமானம், வாயு தொல்லைகள் பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

 கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், சுகப்பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
 பேரிச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம் ஒரு சிறந்த அலர்ஜி எதிர்ப்பு பொருளாக உள்ளதால் சிறந்த ஒரு வலி நிவாரணியாகவும் கைகால் வீக்கத்தை குறைக்கவும் துணை புரிகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை