தலைவலி குணமாக சில எளிய வழிகள்
கிராம்பு மற்றும் உப்பு கலவை கல்.
உப்பிற்கு நீரை உறிஞ்சி கொள்ளும் திறன் உள்ளது.
சிறிது கிராம்பு சேர்த்து கல் உப்பை பால் கலந்து அரைத்து பற்றிட ஈரத்தினை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை இந்த கலவைக்கு உள்ளது.
இதனால் தலைவலி குறையும்.
வெந்நீரும் எலுமிச்சை சாறும்
வயிற்றில் வாயு உற்பத்தியாகுவதாலே பெரும்பாலான தலைவலிகள் வருகின்றது.
இதற்கு சிறிது எலுமிச்சை சாற்றை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் கலந்து அருந்தினால் தலைவலி குணமாகும்.
இந்தச் சாறு வாயு உற்பத்தியை குறைத்து தலைவலியை சரி செய்கிறது.
யூகலிப்டஸ் தைலம்
யூகலிப்டஸ் தைலம் தலை வலிக்கு நல்ல மருந்தாகும்.
இதனைக் கொண்டு மசாஜ் செய்தால் தலைவலிக்கு உடனே நல்ல தீர்வு கிடைக்கும்.
சூடான பால்
தலைவலி இருக்கும் போது கொஞ்சம் சூடான பால் குடித்தால் தலைவலி விரைவாக குறையும் .
சாப்பாட்டில் கொஞ்சம் நெய் சேர்த்து உண்டாலும் தலைவலி குறையும்.
பட்டையை அரைத்து தடவுதல்
மசாலா பொருட்களில் ஒன்றான பட்டை தலைவலிக்கு மிகவும் நல்ல மருந்தாகும்..
சிறிது தண்ணீர் விட்டு பட்டையை நன்கு மை போல அரைத்து நெற்றியில் பற்று போட வேண்டும் .
இப்படி பற்று போட்டால் நொடி பொழுதில் தலைவலி காணாமல் போய்விடும்.
மல்லியும் சர்க்கரையும் சேர்த்து குடித்தல்
கொஞ்சம் மல்லிகை ஒன்று இரண்டாகத் தட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் தலைவலி நீங்கும்.
மேலும் சளி பிடித்ததால் உண்டான தலைவலியாக இருந்தால் உடனடியாக குணமாகும்.
இஞ்சி சீரகம் தனியா கலந்த தேநீர் குடித்தல்
தலைவலி உடனே கட்டுப்பட சிறுது இஞ்சி அல்லது சுக்கு அதனுடன் சிறிது சீரகம், தனியா , சிறிது சர்க்கரை இவற்றை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்தால் சுக்கு காபி ரெடி.
இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் தலைவலி உடனே சரியாகிவிடும்.