முட்டைகோஸ்இன் மருத்துவ பயன்கள்
முட்டைக்கோஸ் நார் சத்துக்களை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை வராது .
பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ,சி மற்றும் கே போன்றவை இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவற்றை ஏற்படுவதை தடுக்கும்.
முட்டைக்கோஸில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் இருப்பதால் அது கண்புரையை தடுக்கிறது.
முட்டைக்கோசை சாப்பிடும்போது அதனை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும் எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோசை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால் அல்சரை விரைவில் குணப்படுத்தலாம் .
ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
இதில் உள்ள அதிகப்படியான விட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.