ஆஹா அதிமதுரம்
அதிமதுரம் 1.5 மீட்டர் உயரம் வரை வளரும் மூலிகைச் செடி.
நடவு செய்த பின் மூன்று அல்லது ஐந்து வருடங்கள் விட்டு அறுவடை செய்யப்படும்.
இந்த வருடங்களில் அதன் வேர் கிழங்குகளும், வேர்களும் பரவலாக முழுமையாக வளர்ந்திருக்கும்.
வேர், தண்டு, கிழங்கு மற்றும் வேர்கள் தண்டு உள்ளிட்டவை மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படும்.
மருத்துவ பயன்கள்
அதிமதுரம் மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு பத்து கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 50 மில்லியாக சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு நீங்கும்.
அதிமதுர துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும்.
காலையில் அரிசி கஞ்சி உடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
வயிறு கோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாள் பட்ட மூட்டு வலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கசாயம் குடிப்பது நிவாரணம் அளிக்கும்.
சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல் அடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.