அப்பாக்களுக்கு மகள் அழகாய் தெரியும் 10 சூழ்நிலைகள்
1. பிறந்தவுடன் கைகளில் சுமக்கையில்
அழகு.
2. முகம் பார்த்து சிரிக்கையில் அழகு.
3. கைபிடித்து நடக்கையில் அழகு.
4. தரைக்கோட்ட பட்டுப்பாவாடை கட்டி தட்டி தத்தி நடக்கையில் அழகு.
5. இரட்டை சடையிட்டு துள்ளித்துள்ளி வருகையில் அழகு.
6.தவறு செய்துவிட்டு தன் சிரிப்பால் தவறை மறைக்கையில் அழகு.
7. தாவணி கட்டிய போது வந்த ஞானத்திலும் அழகு.
8. கைகளை சுட்டுக் கொண்டு எனக்காக சமைக்கியில் அழகு.
9. என் மகளாய் இருந்து வேறொருவர் மனைவியான போதும் அழகு.
10. என் மகள், என் குட்டி தேவதை. அவளின் குட்டி தேவதையை பெற்றெடுத்த போதுமழகு.
அப்பாக்களுக்கு மகள்கள் என்றுமே அழகுதான்