தாய் தேடிப் பயணம்
*************************
எதுவும் நிலையில்லை நிலையற்ற உலகினிலே!
பணம் விரும்பும் பாரினிலே பாசம் தேட வைத்தவளே!
புகழ் விரும்பும் உலகினிலே
நல்ல உள்ளம் தேடச்சொன்னவளே!
தங்கமாய் வளர்த்த எந்தன் தாயிறந்த பின்னாலே தடுமாற்றம் என் வாழ்க்கை
தங்கத் தட்டினிலே
தாய் சோறூட்டி வளர்த்தபிள்ளை
தங்க இதயமின்றி
தவிக்கின்றேன் அறிவாளோ?
வாழ்வின் விளிம்பினிலே வலிகளோட எனதுள்ளம்
அறிந்திருந்தால் அன்றேஅவாள் அழைத்துச் சென்றிருப்பாள்
உண்ண உணவிருந்தும் ஊட்டிவிடத் தாயில்லை,
தாகம் தீர்த்திடவும் தாய்போல நாதி இல்லை !
இரவில் தூக்கமில்லை தாலாட்டும் கேட்கவில்லை !
போத்தி உறங்கிடத்தான் தாயே உன் சேலை என் கையில் இல்லை !
சோலை வனக்குயிலாக சொர்கத்தில் வளர்த்தவளே
மாலை வந்தவுடன் மனமெல்லம் வலிகள்தான்
விழிகளில் வழியும் நீரைத் துடைத்திடவும் நீயில்லை !
கண்ணே போனாலும் கவலைபட ஆளில்லை !
உனை விட்டுப் பிரிந்ததாலே உலகம் விருப்பமில்லை
உயிரோடு பிணமாக வாழ்ந்திடவும் ஆசையில்லை
எட்டாம் அதிசயமே எனை அழைத்துச் சென்றிடுவாய்....!