குழந்தைக்கு நீள தலையா?

பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவம் பெற முன்னோர் பின்பற்றிய முறைகள்;
 சில தலைமுறைகள் முன்பு வரை கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்தது.

 வீட்டில் இருந்த பெரியவர்களே புதிதாக பிறந்த குழந்தைகளை குளிப்பாட்டுவது, மருந்து ஊட்டுவது என அனைத்து பராமரிப்பு பணிகளையும் சிறப்பாக செய்தார்கள்.

 சிலர் இதற்கென தாதிகளை (குழந்தை பராமரிப்பாளர்) நியமித்து பராமரித்தார்கள்.

 கருப்பையில் வளரும் குழந்தையின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மென்மையாக இருக்கும்.

 பிரசவத்தின் போது பிறப்புப் பாதை வழியாக சிரமப்பட்டு வெளியே வருவதால் குழந்தையின் தலைப்பகுதி நீண்டு இருக்கும்.

பெரியவர்கள் குளிப்பாட்டும் போது குழந்தையின் தலை கை, கால்கள் மூக்கு போன்ற பகுதிகளை மென்மையாக அழுத்தியும் பிடித்தும் நீவியும் விடுவார்கள் .

இதனால் அந்த உறுப்புகள் சரியான வடிவம் பெறும் குழந்தையை பாயில் படுக்க வைத்து தூங்கச் செய்வது மற்றும் விளையாடச் செய்வதன் மூலம் அதன் நீளமான தலைப்பகுதி உருண்டையான வடிவம் பெறும்.

 குழந்தையை அதன் தாய் உபயோகப்படுத்திய சேலையை கொண்டு தூண்டி கட்டி அதில் படுக்க வைப்பார்கள்.

 இது குழந்தைக்கு தாயின் அரவணைப்பு உணர்வை கொடுப்பதோடு மட்டுமில்லாமல், தலைப்பகுதி இயல்பாக உருண்டை வடிவம் பெறுவதற்கும் உதவும்.

 குழந்தையை ஒரே நிலையில் படுக்க வைக்காமல் வெவ்வேறு நிலைகளில் மாற்றி படுக்க வைக்கலாம்.

 தலைப்பகுதிக்கு துணிகளை அடுக்கி தலையணை போல அமைப்பதை தவிர்க்கவும்.

 குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மருத்துவரின் ஆலோசனையுடன் குளிப்பாட்டுவதற்கு முன்பு தேங்காய் எண்ணையை உடல் முழுவதும் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம்.

 குழந்தையை நடைபழகும் வயதில் கட்டைவண்டியில் கைப்பிடித்து நடக்கும் போது கால் திசைகளுக்கு வலிமை கிடைக்கும்.

 பாயில் படுக்க மற்றும் விளையாட வைப்பது, தூளியில் தூங்க வைப்பது போன்ற முன்னோர்களின் பழக்கங்களை கடைப்பிடித்தால் குழந்தையின் தலைப்பகுதியை சரியான வடிவத்திற்கு கொண்டுவர முடியும்.
 அதே நேரம் இயல்பிலேயே நீண்டு இருக்கும் தலைப்பகுதியை உருண்டையாக மாற்றுவதற்காக தவறான முறைகளை பின்பற்றக் கூடாது.

கருத்துரையிடுக

புதியது பழையவை