வளர் இளம் பெண்களே....!

வளர் இளம் பெண்களின் உணவையும் உடலையும் கவனிப்பது அவசியம்

 இப்போது பெண்களிடையே குழந்தையின்மை பிரச்சனைகள் பெருகி வருகின்றன.

 தாய்மை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களின் 60% பாலிஸிடிக் ஓவரி சின்ட்ரோம் (பிசிஓஎஸ்) எனப்படும் சின்ட்ரோம் பெருகி கொண்டிருக்கிறது.

 இதனால் மாத விலக்கு கோளாறு ஏற்பட வேண்டும் என்பதில்லை.

 சினைப்பையில் கட்டி இருக்க வேண்டும் என்பதில்லை .

இவை இரண்டும் சரியாக இருந்தாலும் பிசிஓஎஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டு .

இதனால் தாய்மைக்கு தடையாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கதே.

 இதன் அறிகுறிகள் உணர்ந்து சிகிச்சை செய்து கொள்கிறவர்கள் 40% என்றால், 60% பேர் அறிகுறியை உணராமல் அந்த நோய் தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 மற்ற நோய்களைப் போல இதையும் தொடக்கத்திலேயே கண்டறிந்தால் எளிதாக கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.

 30 விழுக்காடு பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறு ஏற்படுகிறது.

 ஒன்பது முதல் 10 வயது சிறுமிகளாக இருக்கும்போதே பெற்றோர் அவர்களை கவனித்தால் இந்த பாதிப்பை தொடக்கத்திலேயே கண்டறிந்து விடலாம்.

 இது இதய நோய் ,நீரழிவு உருவாகும் சூழலை அதிகரிக்கும்.

 குழந்தையின்மைக்கும் முக்கிய காரணமாகும்.

 சிறுமிகளாக இருக்கும் போதே மார்பக வளர்ச்சி அதிகமாக இருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும்.

 மேலும் சிறு வயதிலேயே பூப்படைவது, அதிக எடை, அளவுக்கு அதிகமாக மெலிந்து போதல் ,எப்போதும் சோர்வாக இருப்பது ,தூக்கம் குறைதல், பின் கழுத்து, கை மூட்டுகள் ,கையை மடக்கும் பகுதிகளில் கருப்பு நிறம் படர்தல், முகத்தில் கருப்பு படை தோன்றுதல், முகத்தில் எண்ணெய் தன்மை அதிகரித்தல், ஒற்றைத் தலைவலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

 இவை அனைத்தும் இன்சுலின் லெப்டின் ஹார்மோன்களின் சமசீரற்ற தன்மையால் தோன்றுவதாகும்.

 முகத்தில் கீழ் பாகம் மட்டும் குண்டாகுதல், பற்கள் முன்னோக்கி துறுத்துதல் , மார்ப்பு தோல் பகுதி மட்டும் பெரிதாகுதல், கழுத்து குண்டாகுதல்,  ஸ்டராய்ட் ஹார்மோனால் ஏற்படும் பாதிப்பு ஆகும்.

 ஆறு மாதங்கள் வரை மாதவிலக்கு வராமல் இருந்தால், வந்தாலும் ஒன்று இரண்டு நாட்களில் முடிந்து போதல் அல்லது நிற்காமல் வெளியாகிக் கொண்டிருப்பது, குழந்தையின்மை 90 நாட்களுக்கு கருக்கலைதல் ஆவது, மீசை ,தாடி வளர்தல் ,உடலில் தேவையற்ற இடங்களில் முடி வளர்தல், மிக அதிகமாக தலைமுடி உதிர்தல் போன்றவைகளும் இதன் அறிகுறிகள் ஆகும்.

 இதற்கு சரியான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

 தினசரி 1200 கலோரி அளவுள்ள உணவுகளை சரிவிகிதமாக உட்கொள்ள வேண்டும்.

 அதில் 40 விழுக்காடு மட்டுமே மாவுச்சத்து உள்ள உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
 பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள், பால், தயிர் போன்றவைகள் உணவில் குறிப்பிட்ட அளவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 நடைபயிற்சி, உடை உடற்பயிற்சி, நடன பயிற்சி, நீந்துதல், ஆசனங்கள், தினசரி செய்ய வேண்டும் .

எடை சீராக வைக்க வேண்டும் .

தினசரி செய்ய வேண்டிய உடற்பயிற்சியை தொடர்ந்து செய்வது நல்லது.

 இவ்வாறு மேற்கூறியவற்றை நன்கு அறிந்த கடைபிடித்தால் இந்த நோயை கண்டிப்பாக தவிர்க்க முடியும் .

நலமுடன் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை