மலருக்குள் மறைந்திருக்கும் மருத்துவம்

மலர் மருத்துவம் 

முருங்கைப்பூ 

முருங்கை பூவை கூட்டாகவோ பொரியலாகவோ செய்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 உடல் வலிமை பெறும்.

  வெங்காய பூ 

மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்கள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 அடிக்கடி மயக்கம் பித்த வாந்தி பிரச்சனை உள்ளவர்கள் வெங்காய பூவை கூட்டு வைத்து சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.

மாம்பூ

மாம்பூவை உலர்த்தி கஷாயம் செய்து சாப்பிட்டால் சீத பேதி சட்டென்ன நிற்கும்.

 மாம்பூவுடன் தயிர், ஜீரகம், மிளகு ஒரு சிட்டிகை சேர்த்து பச்சடியாக சாப்பிட்டால் உஷ்ண சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.

 வேம்பு 

வேப்பம்பூவை பறித்து நிழலில் உலர்த்தி வைத்து இந்த பூவை போட்டு ரசம் வைத்தால் சுவையாக இருக்கும்.

 வயிற்றில் உள்ள அழுக்குகள் வெளியேறி குடல்கள் சுத்தமாகும் .

குடல் சுத்தமானால் வியாதிகள் வராது.

 இதை துவையல் செய்தும் சாப்பிடலாம்.

 செம்பருத்தி பூ 

ஆஸ்துமா நோயாளிகளின் கண்கண்ட மருந்தாக செம்பருத்தி உள்ளது.

 சாதாரணமாக இந்த பூவை மென்று சாப்பிட்டால் போதும் ஆஸ்துமா, இதய நோய், கல்லீரல் பாதிப்பு , சிறுநீர் கடுப்பு என பல வியாதியை குணமாக்கும் வல்லமை கொண்டது .

ஆவாரம்பூ 

ஆவாரம் பூ சர்க்கரை வியாதிக்கு நல்ல பலனை கொடுக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இன்னும் சில நோய்களுக்கும் மருந்தாகிறது.

 அவை சிறுநீர் கடுப்பு, பிறப்பு உறுப்புகளின் எரிச்சல், நுரையீரல் பிரச்சனைக்கும் மருந்தாகிறது.

 ஆவாரம் பூவை பொடி செய்து தேய்த்து குளித்தால் மேனி மின்னும்.

 நித்திய கல்யாணி பூ 

இந்த பூ சாதாரணமாக சாலைகளின் ஓரமாகவும் பூத்திருக்கும். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணம் அபாரம்.

 சுகர் இருப்பவர்கள் இந்த பூ 5 மட்டும் தண்ணீரில் போட்டு காய்ச்சிவிட்டு அந்த தண்ணீரை குடித்தால் குடித்தால் போதும் சுகர் கட்டுப்பாட்டில் இருக்கும்.
 செரிமானப் பிரச்சனை இருக்காது பாத எரிச்சல் வலி இருக்காது.

கருத்துரையிடுக

புதியது பழையவை