அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில வழிமுறைகள் :
ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம்.
அந்த காற்றை இரப்பை வெளியேற்றும் போது தான் ஏப்பம் உண்டாகிறது.
ஒரு நாளில் ஒரு முறை ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால் அடிக்கடி வரும் ஏப்பம் அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். இந்த பிரச்சினையை வீட்டு சமையல் அறையில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாக தீர்க்க முடியும்.
அதைப்பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்
காரணம்
வேகமாக சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களை பருகுவது போன்ற பல காரணங்களால் ஏப்பம் வரும்.
இரவில் தாமதமாக சாப்பிடும் போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும் போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும்.
இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும் .
சாப்பிட்டு உடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி அதிக சத்தத்துடனும் ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம் நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண் ஆகியவற்றின் அறிகுறியாகும்.
உணவு முறைகள்
இரப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமில தன்மையை குறைக்க கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அடிக்கடி வரும் ஏப்பத்தை தடுக்க முடியும்.
பழங்கள்
ஆரஞ்சு ,எலுமிச்சை, பப்பாளி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஏப்பம் வருவது குறையும்.
புதினா மற்றும் ஏலக்காய் டீ குடிக்கும் முறைகள்:
தண்ணீரில் புதினா இலைகளை போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்பு அந்த நீரை வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வரலாம்.
வாயுத்தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தை துரிதப்படுத்தும்.
இதனால் ஏப்பம் வருவது குறையும்.
பெருங்காயம்
சூடான நீரில் சிறிது பெருங்காயத்தை கலந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பு பிடித்தால் ஏப்பம் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.
தயிர்
தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வயிற்று கோளாறுகளை குணமாக்கும் திறன் கொண்டவை.
பூண்டு
பூண்டில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள் வாயு தொடர்பான கோளாறுகளை நீக்கும்.
எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.