பேஸ்க்கு மாஸ்

குளிர்கால பேஸ் மாஸ்க்குகள்

 கோடை காலத்தில் மட்டுமல்ல குளிர் காலத்திலும் நிறைய சர்ம பிரச்சனைகள் வரும் .

குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு அதிக வறட்சியும், சரும சேதமும் உண்டாகும்.

 எப்படி தவிர்க்கலாம்? 

 இதோ சில சரும மாஸ்குகள்:

 குளிர் காலத்தில் சருமத்தின் பளபளப்பு குறைந்து சற்றே மங்கிய தோற்றம் உண்டாகும் .

அதற்கு 

1 டேபிள் ஸ்பூன் தேன் 

மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர்

 சேர்த்து கலந்து சீரம் போல் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

 சருமத்திற்கு புத்துணர்வு மேலும் பள பளப்பு கிடைக்கும்.

 அரை மூடி தேங்காயை அரைத்து பேஸ்ட்டாக முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

 இதனை குளிர்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் அடிக்கடி பயன்படுத்த வறண்ட சரும பிரச்சனைகள் மற்றும் வயதானவர்களுக்கு உண்டாகும்.

 சர்வதுவார பிரச்சனைகள் மற்றும் பருக்களால் உண்டான வடுக்கள் சரியாகும்.

 சிலருக்கு குளிர் காலத்தில் அதீத இறந்த செல்கள் பிரச்சனை இருக்கும்.

 அவர்கள் பிசுபிசு பற்ற மாஸ்க் பயன்படுத்த இந்த முறையை உபயோகிக்கலாம்.

 ஒரு கேரட்டை நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி அதனுடன் தேன் சிறிது கலந்து தடவலாம்.

இதனால் பளிச்சு முகத்துடனும், வறட்சி காரணமாக உண்டாகும் செல்கள் சேதம் தோல் உரிதல் பிரச்சனையும் தீரும்.

 வாழைப்பழம் மற்றும் வெண்ணை இரண்டையும் ஒரே அளவில் ஒன்றாக அரைத்து மசித்து முகத்தில் பூச, சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துடன் புத்துணர்வும் கிடைக்கும்.
 மேலும் நல்ல பள பளப்பும் உண்டாகும்.

 ஆயுள் சருமம் கொண்டவர்கள் இந்த மாஸ்கை தவிர்க்கவும்.

 பப்பாளி மற்றும் பால் இரண்டையும் ஒன்றாக அரைத்து பேஸ்டாக மாற்றி முகத்தில் தடவி பத்து முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

 பாலில் இருக்கும் வைட்டமின் ஈ சருமத்திற்கு தேவையான மினரல்களை கொடுப்பதுடன், வறட்சியை மீட்டெடுத்து தோல் சுருக்கத்தையும் சரி செய்யும் பப்பாளி முகத்திற்கு பிரகாசத்தை கொடுக்கும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை