நகம் கடிக்கும் குழந்தைகளை தடுப்பது எப்படி?
நகத்தைக் கடிக்காதே! என அவ்வப்போது அதற்றுவதை பார்த்திருக்கிறோம்.
குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக தடுக்க வேண்டும்.
அர்த்தம்
நகம் கடித்துக் கொண்டு குறிப்பாக குழந்தை ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தால் அல்லது பள்ளியில், வீட்டில் இருக்கும் உறவினர்கள், வெளியே நண்பர்கள் என ஏதோ வகையில் குழந்தைகள் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள் என்று அர்த்தம்.
எந்த பிரச்சினையும் இல்லை என்றால் கூட அவர்கள் வாழ்க்கை ஏதோ சலிப்பை உண்டாக்கி போரடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது என அர்த்தம்.
பாதிப்பு
தொடர்ந்து நகம் கடிப்பதால் சிறுவயதிலேயே நக இடுக்குகள் க்யூட்டிகள் பாதிக்கப்படும்.
மேலும் நகம் வளர்ச்சியிலும் தடை உண்டாகும்.
அதிக நேரம் இத்தன்மையுடன் இருப்பதால் நகை இடுக்குகளில் பூஞ்சை தொற்று உண்டாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மேலும் கடிக்கும் போது தெரியாது, ஒரு கட்டத்தில் நகம் அதிகமாக கடித்து அது ரத்த வரும் அளவுக்கு மாறி வலியை கூட உண்டாக்கும்.
எனவே உங்கள் குழந்தை நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எனில் அதனை சில வழிகளை கொண்டு தடுக்கலாம்:
1. திசை திருப்பங்கள் உங்கள் குழந்தை செய்வதற்கு எந்த வேலையும் இல்லாத பட்சத்தில் சும்மா இருக்க முடியாமல் நகம் கடிக்க வாய்ப்புகள் உண்டு, எனில் குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
2. புதிர் விளையாட்டு, கியூப் பாக்ஸ், கேரம், செஸ் உள்ளிட்ட விரல்களுக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளால் அவர்களை திசை திருப்பலாம்.
3. பேசுங்கள், சில குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிப்புற இடையூறுகளையும் மனதில் போட்டு குழப்பம் போது நகம் கடிக்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
அவர்கள் எவ்விதமான பிரச்சினையில் இருக்கிறார்கள் என்பதை கேட்டு பேசி அவர்களுக்கு தைரியத்தை கொடுக்கலாம் தூங்க வைக்கலாம்.
4. வயிற்றுக்கு தேவையான சாப்பாடு கிடைத்தால் தானாகவே தூக்கம் வருவது இயல்பு.
5. தக்க சமயத்தில் சரிவிகித ஊட்டச்சத்துடன் ஆகாரம் கொடுத்து அவர்களை தூங்கச் செய்ய முயற்சிக்கலாம்.
6. உடலும் மனமும் ஓய்வு பெற்றாலே இயல்பு நிலை திரும்பும்.
7. வீட்டில் நகம் கடிப்பதை நாம் கண்டவுடன் நிறுத்துவது போலவே பள்ளியிலும் டியூசன் மற்றும் இதர பயிற்ச்சி இடங்களில் கூட குழந்தை நகம் கடிக்கும் பழக்கத்தை தெரிவித்து கண்டிக்கும்படி கூறுங்கள்.
8. திரும்பத் திரும்ப கண்டிக்கும் போதும், சொல்லும் போதும் குழந்தை அந்த பழக்கத்தை நிறுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
9. உடற்பயிற்சிகள் கொடுக்கலாம் அவர்கள் நகம் கடிப்பதை கண்டால் விரல்களுக்கு கைகளுக்கு என சில சின்ன சின்ன உடற்பயிற்சிகள் கொடுத்து அவர்களின் சோம்பேறித்தனத்தை திசை திருப்பி சுறுசுறுப்பாகலாம்.
10. குடும்பமாக ஒன்றாக இருங்கள். குழந்தை பெரும்பாலும் தான் தனிமையை உணர்ந்தாலும் நகம் கடிக்க வாய்ப்புகள் உண்டு. எனில் அவ்வப்போது குழந்தையுடன் இணைந்து ஓவியங்கள் வரைவது குழுவாக இணைந்து சின்ன சின்ன விளையாட்டுகள் விளையாடுவது கதை சொல்லுவது என்ன அவர்களுடன் அவர்கள் உடலான குடும்ப நேரத்தை அதிகரித்து தனிமையை தவிர்க்கலாம்.
11. தக்க நிபுணரை சந்தியுங்கள் இவற்றில் எதை செய்தும் குழந்தையின் நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை எனில் தகுந்த மனநலம் சார்ந்த நிபுணரை சந்திப்பது நல்லது.
12. ஏனெனில் எதை செய்தும் குழந்தை நகம் கடிப்பதை நிறுத்தவில்லை எனில் ஏதோ பெரிய பிரச்சனை குழந்தைகளுக்கு இடையூறாக இருக்கிறது என அர்த்தம் அதற்காக சிகிச்சை அல்லது வழிகள் செய்வது நல்லது.