சேமிப்பை அதிகமாக்கும் மினிமலிசம்
குறைந்தபட்ச தேவைகளுடன் வாழ்வதே மினிமலிச வாழ்க்கை முறை.
இதன் மூலம் வாழ்க்கையில் முக்கியமில்லாதவற்றை அகற்றி மகிழ்ச்சியை தரும் விஷயங்களை பெறலாம்.
எதற்கு முக்கியத்துவம்
1.மினிமலிச வாழ்க்கை முறையில் தேவையில்லாததை கைவிடுவதும், தேவை இது என்பதில் கவனம் செலுத்துவதும், முக்கியமானது.
2.உதாரணமாக உங்களுக்கு பயணம் செய்வது பிடிக்கும் ஆனால் அதற்கு பதிலாக உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்குவதற்காக ஷாப்பிங் மாலில் பல மணி நேரங்களை செலவழித்து கொண்டிருப்பீர்கள், இவ்வாறு ஷாப்பிங் செய்ய செலவழிக்கும் உபரி நிதியை பயணத்திற்காக சேமிக்கலாம்.
3. சேமிப்பு உங்களை மாற்றும் பயணம் உங்களுக்கு ஏராளமானதை கற்றுத் தரும்.
4.உங்கள் துணி அலமாரியை அலசுங்கள் அப்போது உங்களிடம் இருக்கும் துணிகளை பற்றி தெரிந்து கொள்வீர்கள்.
5.அதன் மூலம் தேவையில்லாமல் அதிகமான ஆடைகள் வாங்குவதை தவிர்ப்பீர்கள்.
6.உண்மையிலே உங்கள் வாழ்க்கைக்கு தேவையானது என்ன?நீங்கள் செலவழிக்கும் பணம்.அந்த மதிப்புகளோடு ஒத்துப் போகிறதா? என்று சிந்தித்தால் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தெரிந்து கொள்வீர்கள்.
தள்ளுபடி பொறியிலிருந்து தப்புங்கள்
1.பல நேரங்களில் மக்கள் மலிவானவை தள்ளுபடி போட்டிருக்கிறார்கள் என பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள்.
2. இந்த தள்ளுபடி பொறிகளில் சிக்கும்போது இந்த பொருட்களை ஏன் வாங்குகிறோம் என்பது குறித்த சிந்தனை,தள்ளி போய் அடுத்த விற்பனை எப்போது வரும் எவ்வளவு தள்ளுபடியில் வாங்கலாம் என்பதில் கவனம் போகும் குறைவானதே போதும் என்கிற மனநிலை இத்தகைய பொருள்களில் இருந்து உங்களை தப்ப வைக்கும்.
கடனை விரைவாக செலுத்துங்கள்
1.தேவைப்படும் பொருட்களை மாதக் கடனில் வாங்குவதை தவிர்த்து கடன் இல்லாமல் கையில் இருக்கும் காசை கொண்டு வாங்கலாம்.
2.அது போல் ஏற்கனவே வாங்கி இருந்த கடன்களை சேமித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து அடைக்கலாம்.
3,இந்த முறையின் மூலம் வீட்டுக் கடனை கூட ஒரு தவணை அதிகமாக செலுத்தி கடன் தொகையை குறைக்க முடியும்.
ஆடம்பரத்தை குறையுங்கள்
1.குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாடகை வீடு,வாகனம்,மற்றும் பிற பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. குறைந்த நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு, பெரிய வீட்டை வாடகைக்கு தேர்ந்தெடுப்பது, பயன்பாடு குறைவாக இருந்தும் தேவையில்லாமல் வாகனங்கள் வாங்குவது போன்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கலாம்.
மனநிறைவு
1.மன அமைதி,மனநிறைவு ஆகியவை மினிமலிச வாழ்க்கை முறையில் துணை விலை பொருட்களாகும்.
2. ஒழுங்கற்ற, சிந்தனையற்ற செலவினங்களை குறைப்பது, மன அழுத்தத்தை குறைக்கும் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே பணத்தை செலவழிப்பதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் பெற முடியும்.