சிதறிய முத்து செய்திகள்

செய்தி துளிகள்
1. பெண் குழந்தையால் பெட்ரோல் இலவசம்
2. கலைஞர்களுக்கு மானியம்
3. மின்சார பேருந்து
4.. பெண்களுக்கும் இடமுண்டு

1. பெண் குழந்தையால் பெட்ரோல் இலவசம்
 1. மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றை ராஜேந்திர சாய்னானி என்பவர் நடத்தி வருகிறார் .

2.இவருக்கு வாய் பேச முடியாத சகோதரி உள்ளார் .

3.அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.

4. மருமகள் பிறந்த சந்தோஷத்தில் அன்று தனது பெட்ரோல் நிலையத்திற்கு வந்த அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் இலவச பெட்ரோல் டீசலை அளித்துள்ளார்.

5. இவரது கொண்டாட்டத்தை குடும்பத்தினரும் வரவேற்று ஆண் குழந்தை பிறக்கும் போது இருக்கும் அதே மகிழ்ச்சி பெண் குழந்தை பிறக்கும் போதும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

2. கலைஞர்களுக்கு மானியம்
1.பொதுவாகவே கலைஞர்கள் போதுமான வருமானம் இல்லாமல் சிரமப்படுவது நமக்குத் தெரிந்ததுதான்.

2. இதனால் பல கலைஞர்கள் திறமை இருந்தும் வருமானம் இல்லாததால் வேறு வேலையில் ஈடுபடும் சூழ்நிலைதான் நிலவி வருகிறது.

3. இது போன்ற கலைஞர்கள் வருமானத்தை எண்ணி துவண்டு போகாமல் தங்கள் கலையில் மட்டும் ஆர்வம் செலுத்த அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை வருமானம் கொடுக்கப்படும் என அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.


3. மின்சார பேருந்து
1.ஹோலி த்ரோப் 14 வயது சிறுமி தனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் மூலமாக டீசலால் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு புகையினை சுவாசிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பிராஜெக்ட் செய்துள்ளார் .

2.இதன் மூலம் தனது பள்ளி பேருந்தில் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாவதை அறிந்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டார்.

3. மியாமியில் பள்ளி பேருந்துகள் அனைத்தும் மின்சார பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது.


4.. பெண்களுக்கும் இடமுண்டு
1.எகிப்தில் நீதித்துறையில் பிரத்யேகமாக ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில் பெண்கள் பல முறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

2. இதனிடையே எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி சில மாதங்களுக்கு முன் நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என அறிவித்ததை அடுத்து 98 பெண் நீதிபதிகள் முறையான பயிற்சி பெற்று பதவி ஏற்று உள்ளனர்

கருத்துரையிடுக

புதியது பழையவை