பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள்.....


பெண்களின் உடல் அமைப்புக்கு ஏற்ற ஆடைகள்


ஒல்லியாக இருப்பவர்களுக்கு

*மெலிந்த தோற்றம் கொண்டவர்களுக்கு பெரும்பாலான உடைகள் பொருத்தமானதாக இருக்கும்.

*பென்சில் வகை பேண்ட்கள் கால்களை அழகாக காட்டும்.

*நீளமான பாவாடைகளை அணியலாம் .

*சுடிதார் மற்றும் ரவிக்கை அணியும் போது, குட்டையான கைப்பகுதிகளை கொண்ட ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
உயரமாக இருப்பவர்களுக்கு

=> உயரத்தினை காட்டும் வகையில் நீளமான ஆடைகளை அணியலாம்.

=>லெகங்கா ,நீளமான பாவாடைகள், கவுன், போன்ற உடைகள் பொருத்தமானதாக இருக்கும்.

=>கால் பாதம் வரை மறைக்கும் போஹாே ஸ்கர்ட் அழகை அதிகரிக்கும்.

=>உயரத்தை குறைத்துக் காட்ட விரும்புபவர்கள், பாவாடை போன்றவற்றை அணியலாம்.
உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு

>>>டாப் ஒரு வண்ணத்திலும், பாட்டம் மற்றொரு வண்ணத்திலும் இருக்குமாறு உடை அணியலாம்.

>>>ஸ்கர்ட், கிராப் டாப் என்று பிரித்து அணியக்கூடிய ஆடைகள் உயரத்தை குறைத்து காட்டும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது.

>>>மேலிருந்து கீழாக கோடுகள் போட்ட உடைகளை அணிவது உயரத்தை அதிகரித்து காட்டும்.

>>>கால்கள் தெரிவது போன்ற ஆடைகளும், உயரத்தை அதிகரித்து காட்டும்.

பருமனாக இருப்பவர்களுக்கு

>>அடர்ந்த நிறம் கொண்ட ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் ஒல்லியாகத் தெரியலாம்.

>>பச்சைக், கருப்பு, மெரூன் போன்ற நிறங்கள் பருமனான தோற்றம் கொண்டவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

>>அதிக வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடைகள், பல லேயர்கள் கொண்ட ஆடைகள்,பருத்தி ஆடைகள் ஆகியவை தவிர்த்து விடலாம்.

>>கிரேப் சில்க், ஷிபான் போன்ற உடலோடு ஒட்டும் ஆடைகளை அணியலாம்.

உடலின் அமைப்பிற்கும், எடை தோற்றத்திற்கும், ஏற்றவாறு உடை அணிவதன் மூலம்,அழகோடும், தன்னம்பிக்கையோடும் காணப்படலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை