கீழே ஐந்து எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்பு செய்வது நல்லது
கண்களின் ஆரோக்கியத்திற்கு
அமைதியான இடத்தில் சம்மணம் இட்டு நிமிர்ந்து உட்காரவும்.
வலது கையின் பெரு விரலை முகத்திற்கு நேராக நீட்டவும்.
உங்கள் பார்வை விரலில் மீது இருக்கும் படி செய்யவும்.
கையை வலது புறமாக மெதுவாக நகர்த்தவும்.
தலையை திருப்பாமல், விழிகளை மட்டும் விரலை நோக்கி நகர்த்தவும்.
10 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும் .
இவ்வாறு கையை இடது புறமாகவும், மேலும் கீழும் நகர்த்தி தொடர்ந்து செய்யவும்.
ஒவ்வொரு முறையும், கைகளில் நிலையைமாற்றும் முன்பு கண்களை 10 வினாடிகள் மூடி ஓய்வு கொடுக்கவும்.
இந்த பயிற்சியினால் கண்களில் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்காக
காலணிகள் அணியாமல் கீழ்வரும் பயிற்சிகளை செய்யவும்.
கால் விரல்கள் மட்டும் தரையில் படும்படி செய்து, குதிகால்களை மேல் நோக்கிய நிலையில் வைத்தபடி தொடர்ந்து பத்து அடி தூரம் வரை முன்னோக்கியும், அதே நிலையில் பின்னோக்கியும் நடக்கவும் .
பின்பு குதிகால்கள் தரையில் படும்படி செய்து, கால் விரல்களை மேல் நோக்கிய நிலையில் தொடர்ந்து பத்து அடி தூரம் வரை முன்னோக்கியும், அதே நிலையில் வைத்தபடி பின்னோக்கியும் நடக்கவும்.
நேராக நின்று பாதங்களை சற்று உயர்த்தி, கடிகார திசையில் ஐந்து முறை முழுமையாக சுழற்றவும் .
பின்பு எதிர் கடிகார திசையில் ஐந்து முறை முழுமையாக சுழற்றவும் .
பின்பு பாதங்களை சமமாக தரையில் வைக்கவும்.
இதன் மூலம் கால் திசைகள் வலுவடையும்.
இடுப்பு எலும்புகள் பலம் பெறுவதற்கு
மென்மையான தலையணையின் மேல்தலையை வைத்தவாறு தரை விரிப்பின் மீது நேராக படுக்கவும்.
பின்பு கால்களை மடக்கி, இடுப்பு பகுதியை மட்டும் மேல்நோக்கி தூக்கவும்.
அதே நிலையில் ஐந்து வினாடிகள் இருந்து, பின் கீழே இறக்கவும்.
இதைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யவும்.
பின்பு, ஒரு காலை மட்டும் தரையில் படும்படி செய்து மற்றொரு காலை மேல்நோக்கி தூக்கவும்.
அதே நிலையில் 5 வினாடிகள் இருக்கவும்.
இவ்வாறு இரண்டு புறமும் மாற்றி செய்யவும்.
மார்பகங்கள் வலிமை பெறுவதற்கு
நின்ற நிலையில் சுவற்றின் மீது, இரண்டு கைகளையும் ஊன்றி, சுவற்றை தள்ளுவது போல தொடர்ந்து முன்னும், பின்னும் ஐந்து முறை செய்யவும் .
இந்த பயிற்சி மார்பகங்களை வலுப்படுத்தும்
முதுகு வலி குணமாக
ஒரு தரை விரிப்பை விரித்துக் கொள்ளவும்.
அதன் மீது உள்ளங்கைகள், முழங்கால்கள் மற்றும் கால்கள் தரையில் படுக்குமாறு படுக்கவும்.
பின்பு தலையை மட்டும் மேலே நோக்கி உயர்த்தவும்.
பின்னர் மெதுவாக கீழிறக்கவும்.
தலையை உயர்த்தும் போது, இடுப்பு பகுதியை சிறிது உயர்த்தவும்.
தலையை கீழிருக்கும் போது மெதுவாக இடுப்பு பகுதியையும் கீழிறக்கவும்.
இந்த பயிற்சி செய்வதன் மூலம் முதுகு வலி வராமல் தடுக்கலாம்.