மெனோ பாஸ் காலம் பெண்களுக்கு சவால் ஆனது. உடல் அளவிலும் மனதளவிலும் சந்திக்க வேண்டிய சவாலான காலம்.
மெனாேபாஸ் காலம்
பெண்களுக்கு 40 வயதில் இருந்து 55 வயதுக்குள் மெனாேபாஸ் காலம் தொடங்குகிறது.
மாதவிடாய் காலத்தில் இருக்கும் உடல் சோர்வும், மனச்சோர்வும், மெனோபாஸ் காலத்தில் தொடக்கத்தில் இருக்கும்.
இதை கடந்து வருவதும் அதற்கு தயாராக இருப்பதும் எளிதானதுதான்.
பயம் கொள்ள வேண்டாம் என்று என்கிறார்கள் மருத்துவர்கள்.
மெனோபாஸ் காலத்தில் நடப்பது
பெண்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்,கருமுட்டை உருவாதல், மாதவிடாய் போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகிறது.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு வெகுவாகக் குறைவதால், மேற்கண்ட செயல்கள் நிற்கத் தொடங்குகின்றன.
இதன் மூலம் பெண்களுக்கு முடி உதிர்வு, உடல் எடை அதிகரித்தல், இரத்த சோகை, மூட்டு வலி, தூக்கமின்மை, இதய நோய்கள், எலும்புகள் அடர்த்தி குறைவது, சரும பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
உணவுகளில் கவனம்
கால்சியம் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் தேய்வதையும், உடைவதையும் தடுக்கலாம்.
கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள்,எண்ணெயில் பொரித்த பண்டங்களை தவிர்த்து நார்ச்சத்துக்கள் புரதங்கள் நிறைந்த உணவுகள், பயிர் வகைகள் போன்றவற்றை சேர்க்கலாம்.
கீரை வகைகள், பழங்கள், உடல் சூட்டை தணிக்கும் இளநீர், நுங்கு, போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது முக்கியமானது.
மன நலன்
மெனோபாஸ் காலத்தில் எரிச்சல், கோபம், கவலை போன்ற எதிர்மறை உணர்வுகள் வெளிப்படுவது இயல்பானது.
இவற்றில் இருந்து விடுபடுவதற்கு எளிய உடற்பயிற்சி,யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.
பிடித்தமான செயல்களில் கவனம் செலுத்தலாம்.
மனநல ஆலோசனைகள் பெறுவதும் முக்கியமானது.
வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும், மருத்துவர்கள் ஆலோசனை பெறுவதும் அவசியமானது.