அந்த வகையில் அதிகப்படியான கொழுப்பு தசைகளோடு குண்டாக இருக்கும் முகத்தை ,ஒப்பனை மூலமாக சற்று ஒல்லியாக காட்டுவதற்கு என்ன மாதிரியான டிப்ஸ் பயன்படுத்தலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்
ஒப்பனை செய்ய தொடங்குவதற்கு முன்பு ,முதலில் முகத்தில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். என்பதை மறவாதீர்கள் . அது நீங்கள் செய்யும் ஒப்பனையை அதிக நேரம் தக்க வைக்க உதவுவதோடு, தசைகள் தோய்வு அடையாமலும் பாதுகாக்கும் .
இதன் பிறகு, பவுண்டேஷன் உபயோகிக்க வேண்டும் .உங்கள் சருமம் எண்ணெய் பசைத்தன்மை கொண்டது என்றால் லிக்யூட் பவுண்டேசன் பயன்படுத்தலாம் . வறண்ட சிரமம் கொண்டவர்கள் மாய்ஸ் சுரைசர் கலந்து இருக்கும் பவுண்டேஷனை தேர்ந்தெடுப்பது சிறந்தது .இதன்பிறகு , பவுடர் பூசி ஒப்பனையை முடிக்க வேண்டும்.
பின்பு முகத்தை ஒல்லியாக காட்டும் ஒப்பனையை தொடங்க வேண்டும் . இதற்காக கன்டியூரிங் ( Contouring - முகத்தில் அதிகமாக இருக்கும் சதையை குறைத்து காட்ட உதவும் அழகு சாதன பொருள் )பயன்படுத்த வேண்டும் .முன்பு கூறியது போல் , எண்ணெய் பசை தன்மை கொண்ட சருமத்திற்கு லிக்விட் வகையும், வறட்சியான சருமத்திற்கு கிரீம் பேஸ்டும் பயன்படுத்தலாம்.மூக்கின் மேல் ,காதில் இருந்து கன்னம் வரை , நெற்றி ,தாடை, ஆகிய இடங்களில் சதை அதிகம் இருக்கும் .அங்கு கண்டியூரிங் கொண்டு கட் செய்ய வேண்டும் .பின்பு அதை பிரஸ் கொண்டு முகம் முழுவதும் பூசவும் .அடுத்ததாக ஹைலைட்டர் கொண்டு பினிஷ் செய்யவும்.
நாம் மேற்கொள்ளும் ஒப்பனையின் நோக்கமே குண்டாக இருக்கும் முகத்தை ஒல்லியாக காட்ட வேண்டும் என்பதுதான் . எனவே மறந்தும் கூட அதில் பிளஸ் (Blush) உபயோகிக்காதீர்கள் .இது மேலும் முகத்தை குண்டாக காண்பிக்கும் . அதற்கு பதிலாக பிராேன்சர் (Bronzer - சீரான சருமத் தோற்றத்திற்கு பயன்படுத்தும் அழகு சாதன பொருள்) பயன்படுத்தினால் முகம் மேலும் ஒல்லியாக தெரிவதோடு, பிளஸ் உபயோகித்தது போன்ற தோற்றத்தையும் தரும்