ரோஸ் டீ குடிச்சா புஸ்டி

ரோஸ் டீ யின் பயன்கள்

ஆன்டி - ஆக்சிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதால் எடை இழப்பை தூண்டி, சீரான எடையை காக்க உதவும் 

தினமும் குடித்து வந்தால் செரிமானம் துரிதமாக நடைபெறும் 

இதில் உள்ள மூலப் பொருட்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் தேவையற்ற உணவுகளை தேடி மனம் அலையாது

இதில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்கும். இதனால் நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடும் ஆற்றல் கிடைக்கும்.

 பெண்களுக்கு மாதம் தோறும் ஏற்படும் மாதவிடாய் வலி ,தசை பிடிப்பு நீங்கும் , உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு இனிமையான விளைவை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன

தயாரிக்கும் முறை

ரோஜா இதழ்கள் 20 

தண்ணீர் 1 1/2கப்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ரோஜா இதழ்களை சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும்.

 நீரின் நிறம் சிவப்பாக மாறியதும் வடிகட்டி குடிக்கலாம்.

 சிலருக்கு இது பிடிக்காத பொழுது டீத்தூள் கலந்தும் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

 எடை குறைக்க விரும்புபவர்கள் இனிப்பு சேர்க்காமல் அப்படியே பருகுவது மிகவும் நல்லது.



2 கருத்துகள்

புதியது பழையவை