முத்தான நன்மையை தரும் முந்திரி

முத்தான நன்மையை தரும் முந்திரி
உண்பதற்கு சுவையாக இருக்கும் முந்திரி பழம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் தரவல்லது.

 முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளதோடு நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும் தாவர வேதியிங்கள் பைட்டோகெமிக்கல்ஸ் அதிக அளவிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

 முந்திரிப் பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

 இத்தகைய கொழுப்பு விழுமங்கள் உடலுக்கு தீமை விளைவிக்கக்கூடிய கொழுப்பை குறைத்து நன்மை தரக்கூடிய கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

 மேலும் ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு விழமங்கள் கரோனரி இதய நோயினை தடுக்க உதவும் என்று அண்மைய ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறியப்படுகிறது.

 இதிலுள்ள மெக்னீசியமானது எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது.

 மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் ரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றைத் தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது .
முந்திரி பருப்பில் உள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணையாக உள்ளதோடு வளர்ச்சி, விந்து உற்பத்தி, செரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்கு படுத்துகிறது.

கருத்துரையிடுக

புதியது பழையவை