தைராய்டு பயம் தரும் நோயல்ல

தைராய்டு பயம் தரும் நோயல்ல
தைராய்டு மற்றும் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் கோளாறு காரணமாக தொண்டையில் உண்டாகும் மாற்றம். இதனை தொடக்கத்தில் கண்டறிவது கடினம்.

 இதற்கு முக்கிய காரணம் அயோடின் குறைபாடாகும். எனவே நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் உப்பை சரியான அளவில் சேர்த்துக் கொண்டால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படாது.

 தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாகவோ? குறைவாகவோ? ஹார்மோன்கள் சுரப்பை பொறுத்தது.

 கைப்போ தைராய்டு டி 4(T4), கைப்பர் தைராய்டு டி3 (T3) இரண்டு வகை படுத்தப்படுகிறது.

 அறிகுறிகள் 
மலச்சிக்கல், உடல் எடை குறையும் அல்லது அதிகரிக்கும், மூச்சு விடுவதில் சிரமம், குரலில் மாற்றம், இருதய துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய் காரணம் பல உண்டு .

 உடலில் ஏற்படும் சில வகை தொற்று நோய்கள் மன அழுத்தம், ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள், இந்த தைராய்டு குணப்படுத்தக்கூடிய ஒரு நோயாகும்.

 ஆகவே அறிகுறிகள் தெரிந்தால் சோதித்துப் பார்த்து மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து மற்றும் சிகிச்சை எடுத்துக் கொண்டால் இதனை சரி செய்யலாம்.

 சில உணவுகளில் அயோடின் தைராய்டு சுரப்பியை சீராக இயங்க பெரிதும் உதவும்.

 ஸ்ட்ராபெரி, காளான், பூண்டு, பச்சை கீரை, முட்டை, மாமிச உணவுகள், தானியம், ப்ராக் கோலி, தக்காளி, தேங்காய் எண்ணெய், உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 கடல் உப்பு அல்லது மேசை உப்பு என இருவகை உப்பு நாம் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

 இரண்டிலும் அயோடின் சோடியம்  சமமாக உள்ளது.

 எந்த உப்பை பயன்படுத்தினாலும் அளவு மிக முக்கியம்.

 தைராய்டு வராமல் இருக்க அயோடின் உப்பு அதிகளவில் பயன்படுத்தக் கூடாது.

 தைராய்டு சுரப்பியானது உடலுக்கு தேவையான ஆற்றல் வளர்ச்சிதை மாற்றம் போன்றவற்றுக்கு தேவைப்படுகிறது.

 எனவே தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பு நம் உடலின் ஒட்டுமொத்த உறுப்புகளை பாதிப்பு அடையச் செய்யும் .

ஆகையால் நாம் இந்த நோயை கட்டுப்பாட்டில் வைக்க சரியான வழிகளை கடை பிடிக்க வேண்டும்.
 இது பயம் தரும் நோயல்ல ஆனால் கவனிக்க வேண்டிய நோய் என்பதை மறக்கக்கூடாது.

கருத்துரையிடுக

புதியது பழையவை