பெண்களை தாக்கும் சிறுநீர் பாதை தொற்று

பெண்களை அதிகம் தாக்கும் சிறுநீர் பாதை தொற்று
சிறுநீர்ப்பாதை தொற்று என்பது பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தை முதல் 100 வயதானவர் வரை எல்லோருக்கும் வரும் பொதுவான நோய்.

 ஆனால் இதில் பெண்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .

அதற்கு முக்கிய காரணம் பெண் உறுப்பின் அமைப்பு .

பெண்களின் சிறுநீர் வழி மிகவும் சிறியதாக இருப்பதால் நுண்ணுயிரிகள் சிறுநீர் பாதிக்குள் மிக எளிமையாக சென்று விடும்.

 இதனாலையே சிறுநீர் தொற்று பெண்களை மிக எளிதாக தாக்குகிறது.

 ஈ கோலை என்னும் பாக்டீரியா சிறுநீர் தொற்றை ஏற்படுத்துகிறது.

 யாருக்கெல்லாம் ஏற்படும்
புதிதாக திருமணமாகி இல்லறத்தில் ஈடுபடும் பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

 இதை ஹனிமூன் சிஸ்டைட்டிஸ் என்பார்கள்.

 கர்ப்பிணிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

 நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது பாதிப்பு வரலாம் .

நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு சிறுநீர் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

 சுகாதாரமில்லாது கழிப்பிடத்தை பயன்படுத்தும் போது இந்த பிரச்சனை ஏற்படலாம்.

 எப்படி தவிர்ப்பது 

நாம் பயன்படுத்தும் கழிப்பிடத்தையும், உடலையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

 சுகாதாரம் இல்லாமல் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணியாக உள்ளது.

 இது தவிர பிறப்பிலேயே சிறுநீர் பிரச்சனைகள் சிறுநீரக அடைப்பு போன்ற பாதிப்பு இருக்கும் பட்சத்தில் இந்தத் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

 மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் சுரப்பி குறைவதாலும் சிறுநீர் வழியில் பாதிப்பு ஏற்பட்டு தொற்று ஏற்படலாம்.

 அறிகுறிகள் 

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் அதிகமாக இருக்கும் .

சூடாக சிறுநீர் செல்லும்.

 சிறுநீர் குறைவாக அடிக்கடி கழிப்பது.

 பெண்களுக்கு அடிவயிற்றில் வலி இருக்கும்.

 காய்ச்சல் குளிர் ஏற்படும் .

சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வரலாம்.

 எப்படி உறுதி செய்வது 

சிறுநீர் பரிசோதனை, யூரின் கல்ச்சர் போன்ற சோதனைகளின் மூலம் சிறுநீர் தொற்று இருப்பதை உறுதி செய்யலாம்.

 இதை குணப்படுத்துவதற்கு மருத்துவரின் சரியான ஆலோசனை உடன் மருந்துகள் உட்கொண்டால் போதும்.

 முறையில்லாமல் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் சிறுநீரக பாதிப்பு நேரும்.

 கர்ப்பிணி பெண்களுக்கு எடை குறைவான குழந்தை பிறப்பு ,குறை பிரசவம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.

 செய்ய வேண்டியவை 

தினமும் மூணு முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் .

பொது கழிப்பிடங்களை பயன்படுத்த நேர்ந்தால், சுகாதாரத்தில் கவனம் தேவை.

 நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது கூடாது.
 சுகாதாரமான பழக்கவழக்கங்களுடன் மேற் சொன்ன விஷயங்களை கடைப்பிடித்து வந்தால் சிறுநீர் தொற்றிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை