வால்நட்
இதில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால் ஆன்டி - இன்ஃப்ளமேட்டரியாக செயல்படும் .
ஆஸ்துமா, ரூமட் டாய்டு ,ஆர்த்ரைடிஸ் எக்ஸிமா, சொரியாசிஸ் பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும்.
டைப் 2 டயாபடீஸ் உள்ளவர்களுக்கு ஏற்றது.
தினமும் கால் கப் எனத் தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டு வர ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
ஒமேகா 3 உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது இதில் மெலடோனின் இருப்பதால் ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் .
மூளை சுறுசுறுப்பாக இயங்கும் சீரான இதயத்துடிப்புக்கு உதவும்.
எல் ஆர்ஜினின் என்ற கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால் ரத்தக்குழாய்களின் விரிவடையும் தன்மையை மேம்படுத்துகிறது.
ரத்தக்குழாய்கள் ஆரோக்கியமாவதால் முதுமை அடைவது தாமதமாக இருக்கிறது.
ஏ. எல். ஏ (Alpha-linolenic acid) நிறைந்துள்ளதால் திடீர் இதயத்துடிப்பு முடக்கம் எனப்படும் சடர்ன் கார்டியக் அரெஸ்ட் ஏற்படாமல் தடுக்கும்.
வைட்டமின் பி, இரும்புச் சத்து, மக்னிசியம், பாஸ்பரஸ், காப்பர், மாங்கனிசு நிறைந்துள்ளது.
நல்ல லேக்சேட்டிவ்ஸ் ஆக செயல்பட்டு மலச்சிக்கல் வராமல் தடுக்கும் .
பாலிபீனல் நிறைவாக உள்ளதால் கல்லீரல் பிரச்சனையை தவிர்க்கும்.
மார்பகம் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் .
சீரான எடை பராமரிப்புக்கு உதவும்.
தினமும் 75 கிராம் சாப்பிட்டு வர விந்து கட்டிப்படும் உயிர் அணுக்களின் எண்ணிக்கை மேம்படும்.