ரயிலில் பயணம் பலருக்கும் பிடித்தமான விஷயம் தற்போது பல்வேறு காரணங்களால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் ரயிலில் தனியாக பயணிக்கிறார்கள்.
அப்போது தங்களையும் தங்கள் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. அதற்கான ஆலோசனைகள்:
இங்கே ரயில் பயணத்துக்காக டிக்கெட் பதிவு செய்யும்போது பெண்களுக்கான தனி இருக்கைகளை பெறுவதில் கவனம் செலுத்துங்கள்.
அவ்வாறு முடியாத சூழலில் பயணம் செய்ய நேரிட்டாலும் முடிந்த அளவிற்கு பெண்கள் இருக்கைகள் இருக்கும் பகுதியை தேர்ந்தெடுங்கள்.
இரவு நேரங்களில் ஸ்லீப்பர் முன்பதிவு செய்கிறீர்கள் என்றால் டிக்கெட் பதிவில் கூடுமானும் வரை அப்பர் பர்த் எனப்படும் மேலே இருக்கும் படுக்கையை தேர்வு செய்வது நல்லது.
இது பெண்களுக்கு பல வகைகளில் வசதியாகவும் ,பாதுகாப்பானதாகவும் இருக்கும்.
தனியாக பயணம் செய்யும்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் எவ்வித தயக்கமும் இல்லாமல் டிக்கெட் பரிசோதகர் அல்லது ரயிலில் ரோந்து வரும் போலீசாரிடம் தெரிவியுங்கள்.
பயணத்தின் போது உங்களுக்கு தேவையான தின்பண்டங்கள், தண்ணீர் போன்றவற்றை வீட்டில் இருந்தே எடுத்துச் செல்லுங்கள்.
ஏனெனில் பலருக்கு ரயிலில் வாங்கி சாப்பிடும் உணவு அசவுகரியத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.
இரவு நேர பயணத்தின் போது சால்வை, சார்ஜர், சானிட்டரி நாப்கின், அவசியமான மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை மறக்காமல் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
ரயிலில் பயணம் மட்டுமில்லாமல் எந்த பயணுமாக இருந்தாலும் விலை உயர்ந்த நகைகள், அதிக பணம் வைத்திருப்பதை தவிருங்கள்.
மற்றவர்கள் முன்பு உங்கள் பையை அடிக்கடி திறந்து மூடுவதை தவிர்ப்பது நல்லது.
ரயில் பயணத்தில் புதியவர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்க்கலாம்.
அவ்வாறு பேச வேண்டிய தேவை வந்தாலும் உங்களைப் பற்றிய தகவல்களை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
செல்போனில் பேசும்போதும் கவனம் தேவை.
ரயிலில் பயணம் செய்ய தேவையான முகவரி சான்றுகளை கைவசம் வைத்திருக்கிறீர்களா? என்பதை கிளம்பும்போதே கவனித்துக் கொள்ளுங்கள்.
இல்லை என்றாலும் டிக்கெட் பரிசோதரிடம் தெரிவித்து முறையான நடவடிக்கைக்கு உட்படுங்கள்.
அதை தவிர்த்து அந்த நேரத்தில் வேறு வழிகளை நாடுவது உங்களுக்கு சிக்கலை உண்டாக்கலாம்.
பயணத்தின் போது அழியும் உடைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
பிறர் கண்களுக்கு உருத்தாத வகையில் உங்களுக்கு வசதியான ஆடைகளை அணிவது முக்கியம்.