நாட்டுக்கோழி கறியில் மருத்துவ பயன்கள்
நாட்டு கோழி இறைச்சியில் நிறம், மணம், குணம் ஆகிய அம்சங்களில் தனித்தன்மையுடன் காணப்படும்.
நாட்டுக்கோழிகள் இயற்கையான பொருட்களை அதிகம் சாப்பிடுவதால், முட்டைக்கும், கோழி இறைச்சிக்கும் அதிக சத்து கிடைக்கிறது.
மிளகின் மருத்துவ பயன்கள் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றிற்கு இதனை மருந்தாக பயன்படுத்துகிறோம்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மிளகு உருவாக்கும் நாட்டுக்கோழி கறியுடன் மிளகு சேர்த்து சமைத்து சாப்பிடும் போது மழைக்காலத்தில் உடலுக்கு தேவையான வெப்பத்தை கொடுக்கும்.
சளி, இருமலுக்கு நல்லது.
மழைக்காலத்தில் வாரம் ஒரு முறை சாப்பிடலாம்.
உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் நாட்டுக்கோழி இறைச்சியை தவிர்ப்பது நல்லது.
கோடைகாலத்தில் மாதம் ஒரு முறை சாப்பிடலாம்.
கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் இதனை சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
சமைத்த நாட்டுக்கோழி இறைச்சியை 6 மணி நேரத்திற்குள் சாப்பிடுவது நல்லது.