வயதானவர்களை அதிகமாக தாக்கும் மூட்டு வலி பிரச்சனை தற்போது இளம் பெண்களிடமும் பரவலாக இருக்கிறது.
காரணங்கள்
உடல் பருமன், உடற்பயிற்சி செய்யாதது, ஹார்மோன் மாற்றங்கள், சர்க்கரை நோய், காச நோய், மரபு வழி நோய், எதிர்ப்பு சக்தி குறைதல், போன்றவை மூட்டு வலி பாதிப்புகளை உண்டாக்கும்.
மூட்டு பகுதி
உடலில் கால், மூட்டு, தோள்பட்டை, கை மூட்டு, மணிக்கட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம், ஆகிய முக்கிய மூட்டு பகுதிகள் உள்ளன.
அறிகுறி
எலும்புகள் இணையும் இடங்களான இப்பகுதிகளில் ஏற்படும் அசவுகரியமான உணர்வு, சோர்வு, வலி வீக்கம் போன்ற உணர்ச்சிகள், மூட்டு வலி பிரச்சனைகளில் அறிகுறியாகும்.
இயல்புக்கு மீறிய எந்த வலியையும் உதாசீனப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும்.
ஆர்த்ரைடிஸ் தினம்
இவ்வாறு மூட்டு வலி பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டே உலக ஆர்த்ரைடிஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆர்த்ரைடிஸ் என்பது ஆர்த்தோ என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.
இதற்கு மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அலர்ஜி என்பது பொருள்.
இளம் பெண்களை தாக்க காரணம்
தற்போது இளம் பெண்கள் பல்லாரும் மூட்டு வலியால் அவதிக்குள்ளாகிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காரணமாக ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் சுரப்பு ஒவ்வொரு மாதமும் குறையும்.
இது மூட்டுகளில் நெகிழ்வுத் தன்மைக்கு காரணமான கார்டிலேஜ் உருவாக்கத்தை குறைக்கும்.
இதனால் இளம் பெண்களுக்கு மூட்டு வலி ஏற்படுகிறது.
மெனோபாஸ் காலத்தை தாண்டிய பெண்களும் மூட்டு வலியால் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.
உடல் பருமனால் பெண்களே அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களையும் எளிதில் மூட்டு வலி பிரச்சனை தாக்குகிறது.
மூட்டு வலிக்கான வாழ்வியல் காரணங்களை அறிந்து வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வலியை குறைக்கலாம்.
தீர்வு
காசநோய், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பக்க விளைவின் காரணமாக மூட்டு வலி இருந்தால் சிகிச்சை பெற்று அந்த நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
உடல் பருமனாக இருக்கும் பெண்கள் எடையை குறைக்க வேண்டும். நடைபயிற்சி ,மூச்சு பயிற்சி, போன்றவை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
மூட்டுகளுக்கு வலிமை தரக்கூடிய கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறை மூட்டு பகுதிகளில் மசாஜ் செய்யலாம்.
இரு சரும துவாரங்களின் வழியாக எலும்பு மூட்டுகளை இணைக்கும் கொலாஜென் புரதத்தை அதிகரிப்பதால் மூட்டுவாத நோய்கள் வராமல் தடுக்கும்.