வலியின்றி அணியலாமே!

வலியில்லாமல் ஹை ஹீல்ஸ் அணியலாமே!
பார்ட்டி மற்றும் ஆடம்பரமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ஹை ஹீல்ஸ் என்னும் உயரமான காலணிகளை அணிவதை இளம்பெண்கள் பலரும் விரும்புகிறார்கள்.

 அதே சமயம் ஹை ஹீல்ஸ் அணிவதன் விளைவாக குதிங்கால் வலி, இடுப்பு வலி, போன்ற பிரச்சனைகள் ஏற்படும், எனும் கவலையும் பலருக்கு உள்ளது.

 இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனத்தில் கொண்டு செயல்படுவதன் மூலம் ஹை ஹீல்ஸ் அணியும்போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முடியும்.

 ஈரப்பதம்
 1.உடலில் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கும் கொடுக்க வேண்டும்.

2. இல்லையெனில் பாதங்கள் வறண்டு தோல் உரிதல், வெடிப்பு காயங்கள், ஏற்படும்.

3. இதில் ஹை ஹீல்ஸ் அணியும் போது காலில் உராய்வு ஏற்படுவதன் காரணமாக மேற்கண்ட பிரச்சினைகள் அதிகரிக்கும். எனவே கால்களை ஈரப்பதத்துடன் பராமரிக்க வேண்டும்.

4. இதற்கு மாய்ஸ்சுரைசர் கிரிமகளை பயன்படுத்தலாம்.
 பாதத்தின் அளவு 
1.பாதத்தின் அளவுகளுக்கு ஏற்ற காலணிகளை தேர்வு செய்ய வேண்டியது முக்கியமானது.

2. சரியான அளவுள்ள ஹை ஹில்ஸ் அணிந்து நடக்கும் போது எவ்வித பிரச்சனையும் ஏற்படாது.

3. வலியின்றி நடை போட முடியும்.

4. காலின் வடிவம் ,காலின் முன்புறம், குதிங்காலின் வடிவம், பாதத்தின் அகலம், என அனைத்தையும் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு ஹை ஹீல்ஸ் காலனியை வாங்க வேண்டும்.

5. இதன் மூலம் நடக்கும் போது உறுத்தல் ஏற்படுவதை தடுக்கலாம்.

 சரியான உயரம் 
1.ஹை ஹீல்ஸ் காலணிகளில் பல வகைகள் உள்ளன.

2. கூர்மையான முறையில் உள்ள ஹீல்ஸ் அணிவதை விட பாதம் முழுவதும் ஒரே அளவிலான உயரம் இருக்கும் வகையில் தேர்ந்தெடுத்து அணியலாம்.

3. இதன் மூலம் கால்களுக்கு மட்டுமின்றி இடுப்புக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

4. கூர்மையான முறையில் உள்ள ஹில்ஸ் அணிய விரும்புபவர்கள் அதை அணிந்து நடப்பதற்கு சிறு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பயிற்சி இல்லாமல் நடக்கும் போது எலும்பு முறிவு கூட ஏற்படலாம்.

 மிருதுவான காலனிகள் 
1.காலடியில் மேற்புறம் பாதங்களை விருதுவாக தாங்கும் வகையில் பஞ்சு போன்று மென்மையாக இருக்க வேண்டும்.

2. குஷன் இல்லாத காலணியை அணியும் போது கடினமாக இருப்பதோடு கடுமையான வலியையும் கொடுக்கும்.
ஷூ வகை சிறந்தது 
1.குதிங்கால் மற்றும் விரல்களை மூடியபடி ஷூ வடிவத்தில் இருக்கும் ஹை ஹீல்ஸ் அணிந்து நடக்கும் போது பாதங்கள் வலுக்காமல் பாதுகாப்பாக இருக்கும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை
 1.ஹை ஹீல்ஸ் அணிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அதை கழற்றி பாதத்தில் சிறு அசைவுகளை மேற்கொள்ள வேண்டும்.

2. இதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் சீராகும்.

3. கால்களுக்கு ஐஸ்பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்கும் போது கால் வலி குறையும்

கருத்துரையிடுக

புதியது பழையவை