இந்த கருமத்த எங்கதான் வைக்கிறதோ?

பாக்கெட்டில் செல்போன்
பாக்கெட்டில் செல்போன், இதயம், எலும்புகளை பாதிக்கும் மனிதர்களின் எதிரிகளாக செல்போன் மாறிவிட்டது
 எனக் கூறினால் அது மிகையாகாது.

 செல்போன் பல வகையில் நமக்கு நன்மைகள் செய்தாலும், நமது ஆரோக்கியத்தை கெடுக்கும் வேலைகளையும் செய்தே வருகிறது.

 செல்ஃபோன்கள் மின்காந்த கதிர்வீச்சுகளோடு தொடர்புடையது.

 செல்போன்களை நாம் உடம்போடு ஒட்டி வைப்பதால் அது உடம்பில் கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும்.

 அப்படி கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.

 பின் பாக்கெட் 

செல்போன்களை பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பின் பாக்கெட்டில் வைக்கின்றனர்.

 இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் பொருளான ஃபோன்கள் ஸ்கிரீன் டைப் உள்ள போன்களாகவே இருக்கிறது தொடுத்துறை அமைப்பினால் நமக்கே தெரியாமல் பலருக்கு அழைப்பு சென்று விடுவதற்கும் வாய்ப்பு அதிகம்.

 சில நேரங்களில் அஜாக்கிரதை காரணமாக உடைந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

 எனவே ஸ்டைலாக பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றுவதை தவிர்க்கலாம்.
 முன் பாக்கெட் 

மருத்துவரின் பார்வையில் இது மிகவும் மோசமான பழக்கமாக பார்க்கப்படுகிறது .

செல்போன்களில் வெளியிடும் கதிர்வீச்சுக்களினால் ஆண்களின் ஆண்மை தன்மை கெட்டுவிடும் ஆபத்து வருவதாகவும் கூறுகின்றனர்.

 உயிர் அணுக்களின் தரம் குறைந்து போவது, அளவு குறைந்து போவது போன்ற கோளாறுகளை செல்போன் கதிர்வீச்சுகள் ஏற்படுத்தி விடுவதாக சில ஆய்வுகள் வெளியாக இருக்கிறது.

 செல்போன்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் திறமை கொண்டது என்பதால் ஆண்களின் உடல் வெப்பமாகி இத்தனை சிக்கலையும் கொண்டு வந்து விடும்.


சட்டை பாக்கெட்டில் செல்போன்கள்
சட்டை பாக்கெட்டில் செல்போன்களை வைப்பதால் சில நேரங்களில் இதய கோளாறும் இது ஏற்படுத்தி விடுவதாகவும் கூறப்படுகிறது.

இடுப்பு பகுதி
 இடுப்பு பகுதி தொடை பகுதியை ஒட்டி இருக்குமாறு செல்போனை பயன்படுத்துவதால் இடுப்பு பகுதியில் இருக்கும் எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து விடுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

 இடுப்பு எலும்பு என்பது மனித உடலை தூக்கி நிறுத்தும் ஆதாரத் தன்மை கொண்டது அந்த எலும்புகளை சுக்கு நூறு ஆகிவிட்டால் மனிதர்களின் நிலைமை அவ்வளவுதான்.

 இடுப்பு எலும்பினை தொடும் வகையில் செல்போன்களை நெருக்கமாக பயன்படுத்தக் கூடாது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

காதுகள்
 பொதுவாக செல்போனில் பேசும் போது காது கண்ணும் போன்ற பகுதிகளை ஒட்டி வைத்தவாறு பயன்படுத்துகிறோம்.

 இது அடிப்படையிலும் தவறு என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

 0.5-1.5 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு வைத்துக்கொண்டு பேச வேண்டும்.

 இதனால் கதிர்வீச்சு தன்மையை சற்று குறைவாக இருக்கும் சரும பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் .
பட்டன் வைத்த போனை கண்டபடி உடம்போடு நெருக்கமாக வைத்திருந்தாலும் இதே தான் நிலைமை.

 பட்டன் ஃபோன்களில் பாக்டீரியாக்கள் தங்கி இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது எனவே இதையும் தவிர்க்க வேண்டும்.

கருத்துரையிடுக

புதியது பழையவை