விளாம்பழத்தின் பயன்கள்
1.விளா மரத்தின் பிசினை எடுத்து, தண்ணீரில் கரைத்து,தெளிந்த பிறகு தண்ணீரை குடித்தால், சிறுநீர் எரிச்சல் தணியும்.
2. விளாம் மர இலையை குளிக்கும் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் சொரி, சிரங்கு, வியர்க்குரு போன்றவை தீரும் .
3,விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.
4.விளாம்பழத்தின் ஓடு, அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல், இழப்பு, ஆஸ்துமா போன்றவை தீரும்.
5.விளாம்பழத்தின் ஓடு, வில்வ ஓடு, மாதுளை ஓடு, மாம்பருப்பு மஞ்சள் அனைத்தையும் சம அளவாக எடுத்து, சூரணம் செய்து, தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் பொடியை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் குணமாகும்.
6. விளாங்காய் திப்பிலி இரண்டையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
7.விளாம் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வெள்ளைப்படுதல் குணமாகும்.