வாசலில் ஒரு போர்டு எழுதினார்.
எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாய் திருப்பி கொடுக்கப்படும்.
இதை கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினியர் டாக்டரிடம் இருந்து 1000 ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.
டாக்டர் என் நாக்கில் எந்த சுவையும் உணர முடியவில்லை
நர்ஸ் அந்த 23 ஆம் நம்பர் பாட்டிலில் உள்ள மருந்தை இவர் வாயில் மூன்று சொட்டு விடுங்க... என்றார் இஞ்சினியர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு... ஐயோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே என்று அலறினார் இவர்.
Very good இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. உங்களுக்கு எல்லா சுவையும் உணர ஆரம்பித்துவிட்டது. 500 ரூபாய் ஃபீசை எடுங்க
உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல் 500 ரூபாயை கொடுத்துவிட்டு சென்றார்.
ஆனாலும் அவர் 1000 ரூபாய் பெறும் முயற்சியை கைவிடவில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கு சென்றார்.
டாக்டர் எனக்கு மறதி ரெம்ப ஜாஸ்தியா இருக்கு என்றார்.
நர்ஸ் அந்த 23 ஆம் நம்பர் பாட்டிலை open பண்ணி மூன்று சொட்டு அவர் வாயில் விடுங்க என்றார் இஞ்சினியர் டாக்டர்.
ஐயோ டாக்டர் இது பெட்ரோல் ஆச்சே என்று அலறினார் இவர்.
Very good உங்க மெம்மரி பவர் நல்லாயிடிச்சு கொடுங்க 500
இந்த முறையும் ஏமாந்து போன டாக்டர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.
எனக்கு கண் பார்வை சரியில்லை மருந்து தாங்க டாக்டர்.
Sorry Sir இதுக்கு என்னிடம் மருந்து இல்லை இதாங்க 1000 ரூபாய். என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினியர் டாக்டர்.
இது 500 ரூபாய் நோட்டு ஆச்சே என்று பதறினார் இவர்.
Very good உங்க கண்பார்வையும் நல்லாயிடிச்சு எடுங்க 500 ரூபாய்.
பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைப்பான்