ஆழ்ந்து தூங்கி எழுபவர்களுக்கு அன்றைய நாள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
தூங்கும் நேரம்
################
✓7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அனைவருக்கும் அவசியமானது. அதிக உடல் உழைப்பில் ஈடுபாடுபவர்கள் மேலும் சில மணி நேரங்கள் தூங்கலாம்.
✓மதிய நேரத்தில் மேற்கொள்ளும் சிறு தூக்கம், காலை முதல் மதியம் வரை வேலை செய்த உடல் மற்றும் மனதுக்கு சிறு ஓய்வையும், அதன் பின்னர் செய்யவிருக்கும் வேலைகளுக்கு தேவையான புத்துணர்வையும் அளிக்கிறது.
தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள்
###########################
✓சிலருக்கு சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தவும்.
✓ சிலருக்கு நாளடைவில் வளர்சிதை மாற்றங்களில் பாதிப்பை உண்டாக்கும்.
✓இதன் மூலம் வயோதிகம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம்.
✓தோல் சுருக்கம், முகப்பொலிவு இழத்தல், போன்றவை உருவாக்கி இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும்.
✓தூக்கமின்மை தொடரும் பொழுது நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், மன அழுத்தம், தலைவலி, எடை இழப்பு போன்றவைகள் உருவாகின்றன.
✓தூங்கும் நேரம் குறையும் போது, நாளடைவில் இன்சோம்னியா போன்ற நோய்கள் ஏற்படும்
✓மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தூக்குமின்மை காரணமாக உடலில் ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது
தூக்கத்திற்கு தேவையான உணவுகள்
################################
பால், வாழைப்பழம், அரிசி சாதம், தேன் போன்றவற்றை சாப்பிடுவது ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக தூக்கம் தேவைப்படுகிறது
தீர்வு
#####
✓உடல் உழைப்பு இல்லாதவர்கள் எளிய உடற்பயிற்சிகள் மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் சிறந்த உடல் மற்றும் மனநலத்தை பெறலாம்.
✓விரைவில் சீக்கிரமாக தூங்கி அதிகாலையில் எழுவதன் மூலம் உடலில் பித்தம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்